Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் அபராதம்,சிறை தண்டனை விதிப்பு

 திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் ச.கவிதாவின் உத்தரவின்படி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சாந்தி அறிவுறுத்தலின்படி,மாவட்டத்தில் உள்ள பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களில் யாசகம் கேட்கும் குழந்தைகள் கண்டறிந்து அவர்களை மீட்பது, மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டுலைன் உறுப்பினர்கள்,

வருவாய்த்துறை அலுவலர்கள், சிங்கப் பெண் அதிரடிப்படை மற்றும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர், ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் ஆய்வு செய்தனர். அப்போது செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவனை மீட்டனர். அவர்களை குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.‘’குழந்தைகளை யாரேனும் யாசகம் கேட்கும் பணியிலோ வேறு எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது. மீறினால் தொழிலாளர் துறை மற்றும் போலீசாரால் அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

எங்களுடன் காவலர்கள் சபீதா, ஆர்த்தி, ஓட்டுநர் மணிவண்ணன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று செயல்பட்டு கொண்டிருக்கிறோம். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் பொதுமக்கள், பெண்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

எங்களது சிங்கப்பெண் படையினர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், அதிகமாக பணிபுரியும் இடங்களான துணிக்கடைகள், நகைக்கடைகள், மில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று பெண்கள் பாதுகாப்பு குறித்துபெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு எந்தவொரு பிரச்னைகள் வந்தாலும் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணைய வழி மோசடிகள், சமூகவலை தளங்களில் பாதுகாப்பான பயன்பாடு குறித்து அவசர கால உதவி எண் 1091 காவல் துறையின் பாதுகாப்பு சேவைகள் வாயிலாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சாந்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!