காவிரியில் கர்நாடகா அரசு 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த முறை 9,000 கனஅடி பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது அளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வினாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்க கோரிய நிலையில், போதிய நீர்வரத்து இல்லாததால் கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவு செய்ய உள்ளது.
