ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 10) ரூ.880 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று ரூ.1,13,160-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை 8வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
