இந்தோனேசியாவில் அனக் கிரக்டாவ் எரிமலை வெடித்து சீறி வரும் நிலையில், அதை நேரில் படம்பிடிப்பதற்காக காரிட்டா கடற்கரையிலிருந்து படகு மூலம் சென்ற 5 பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி உட்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.கடந்த 7-ம் தேதி எரிமலை பகுதியை அடைந்துவிட்டதாக அனுப்பிய குறுஞ்செய்திக்கு பிறகு அவர்களுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணியில் இந்தோனேசிய கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
