மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள காட்டு பகுதிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வரும் ‘பறக்கும் டாக்டர்கள்’ சேவைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானி உட்பட 5 மருத்துவ ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றபோது நிகழ்ந்த இந்த விபத்தில், அதில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
