மதுராந்தகம் , தாரபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொள்வேன்
தேமுதிக பொதுச்செயலாளர் – சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
பிரேமலதா விஜயகாந்த்..
தேமுதிகவின் 22 ம் ஆண்டு கட்சி துவக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடியினை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார் அதனை தொடர்ந்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் பிராத்தனை மேற்க்கொண்டார்…
அப்போது தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு துவக்க விழா இது தேமுதிகவிற்கு பொன்னான நாள் மதுரையில் இலட்சணக்கான தொண்டர்கள் புடைசூள துவங்கப்பட்ட நாள்.. தமிழ்நாடு முழுவதும் இதனை கொண்டாடுகிறோம்..
கேப்டன் எந்த இலட்சியத்திற்கு இக்கட்சியினை ஆரம்பித்தாரோ, தூய எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி கேப்டனின் கனவை தொண்டர்களுடன் இணைந்து வென்றெடுப்போம் இன்று தேமுதிக துவக்க நாள் விநாயகர் சதுர்த்தியுடன் இணைந்துவந்துள்ளது..
கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு?
அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு..
நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்.. திமுகவுடன் கூட்டணியில் தான் தேமுதிக இருக்கும் இரு தொகுதிகளுக்கு எங்கள் முழு ஆதரவும் திமுக வேட்பாளருக்கு இருக்கும்.. அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பேசுகையிலும் அதனை தெரிவித்துள்ளேன்..
தேர்தல் முடிவுகள் மக்கள்தீர்ப்பு தான்…
முதல்வர் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்..
இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொள்வேன்
தேமுதிகவிற்கு அதிக இடங்கள் கொடுத்து விட்டது நீண்டநாட்கள் இருந்த எங்களை விட என திருமாவளன் பேசியுள்ளது தொடர்பான கேள்விக்கு?
இது மட்டுமல்ல பல்வேறு விஷயங்களுக்கு வரும் 16 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பதிலளிக்கிறேன் என்றார்.
