Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னிமலை அருகே பாரம் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சென்னிமலை அருகே பாரம் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சென்னிமலை அருகே பழைய இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னிமலை வழியாக நேற்று மதியம் ஒரு லாரி பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு பனியம்பள்ளி அருகே உள்ள ஒரு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி சென்னிமலையை அடுத்த புலவனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்காக வழி விடும்போது சாலையோரம் உள்ள பள்ளத்தில் சாய்ந்தது. நல்லவேளையாக லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் ராட்சத கிரேன் கொண்டு வந்து லாரியை மீட்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த சாலையின் இரு ஓரங்களிலும் ஒரு மீட்டர் அகலத்திற்கு மண் நிரப்பி சமன் செய்திருக்க வேண்டும்.

ஆனால் தற்போது தார் சாலையின் இரு ஓரங்களிலும் ஒரு அடி அகலத்திற்கு மட்டுமே மண் நிரப்பப்பட்டுள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு கனரக வாகனங்கள் வழி விடும் போது சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழும் நிலை உள்ளது.

அப்படித்தான் இந்த லாரியும் கவிழ்ந்துள்ளது. அதனால் தார் சாலையின் இரு ஓரங்களிலும் ஒரு மீட்டர் அகலத்திற்கு மண் நிரப்பி சமன் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

error: Content is protected !!