Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி- மறியல்

பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி- மறியல்

பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டா வழங்கிய இடத்திற்கு இதுவரை சர்வே செய்து நிலம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை

கண்டித்து வாண்டையார் இருப்பு பிரதான சாலையான தஞ்சாவூர் – மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த

காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!