திண்டுக்கல் மாவட்டம், ராமகிரி அடுத்த பொம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பொம்மன் (47) நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலை தகராறில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது முஷ்டகிணத்துபட்டி சாலையில் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
