Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 பேர் கைது-திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 43) இவர் தில்லை நகர் சிவப்பிரகாசம் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பாரில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் இங்கு ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த ஹரி பாஸ்கர் (37) தென்னூர் ஆழ்வார் தோப்பு காயிதே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரசூல் ( 38 )ஆகிய இரண்டு பேர் மது அருந்தினர் பின்னர் தின்பண்டங்களுக்குரிய தொகையை சத்தியமூர்த்தி கேட்டார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்தனர் இதனால் சத்தியமூர்த்திக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த ஹரி பாஸ்கர் மற்றும் முகமது ரசூல் ஆகியோர் சத்தியமூர்த்தியை பீர் பாட்டிலால் தாக்கினர்.
இதில் அவரது கண் மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது இந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹரிபாஸ்கர் முகமது ரசூல் ஆகிய இரண்டு பேரையும் தில்லை நகர் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் திடீர் மாயம்..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56) இவரது 21 வயது மகள் கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் உள்ள ஒரு தனியார் பருத்தி ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
பின்னர் பின்னர் விடுமுறையில் ஊருக்கு வந்தார் அதன் பின்னர் நேற்று தந்தையும் மகளும் தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் புறப்பட்டனர் இந்த பஸ் திருச்சி பஞ்சபூரி மதியம் ஒரு மணி அளவில் வந்தடைந்தது பின்னர் இரண்டு பேரும் பஸ்ஸிலிருந்து இறங்கினர் அப்போது மகள் தந்த இடம் தண்ணீர் தாகமாக இருக்கிறது ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வாருங்கள் என தந்தையிடம் கூறியுள்ளார் உடனே சத்தியமூர்த்தி அங்குள்ள பெட்டி கடைக்கு சென்று தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மகள் மாயமாகிவிட்டார் பஸ் முழுவதும் தேடிப் பார்த்தார் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதன் பின்னர் சத்தியமூர்த்தி இடங்களைப் பற்றி ஒரு போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் மயங்கி விழுந்த சாவு

திருச்சி அரியமங்கலம் ஏழாவது தெரு ஸ்ரீநிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 62) இவர் வீட்டில் இருந்தபோது மயங்கி கீழே விழுந்தார் உறவினர்கள் அவரை மீட்டு முதலில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்திடர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகன் கருப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மோதி மூதாட்டி சாவு

திருச்சி லால்குடி காட்டூர் போத்தமங்கலம் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் இவரது மனைவி துளசி (78 ) . இவர் திருச்சி மேலப்புதூர் பகுதியில் சாலையை கடக்கும் என்ற போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் துளசி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகன் இளம்பருதி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரை ஓட்டிச் சென்ற திருச்சி மன்னார்புரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link