Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி- டூவீலரில் தவறி விழுந்து ஒருவர் சாவு… கார் கதவை திறந்த போது விபரீதம்

டூவீலரில் தவறி விழுந்து ஒருவர் சாவு... கார் கதவை திறந்த போது விபரீதம்

திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மொய்தீன் (52) .இவர் தனது இருசக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து தலைமை தபால் நிலையம் ரோடு உலகநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் நின்ற ஒரு கார் அருகில் இருசக்கர வாகனம் சென்றது. அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்தவர் கார் கதவை கவன குறைவாக திறந்தார். அந்த நேரத்தில் பிச்சை மொய்தீன் இரு சக்கர வாகனத்தில் அருகில் சென்ற போது கதவு அவர் மீது இடித்து மொய்தீன் நிலைத்தடுமாறு இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிச்சை மொய்தீன் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவரை பரிசோதனை செய்து பார்த்து வரும் வழியிலேயே பிச்சை மொய்தீன் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!