குஜராத்தில் திருடச் சென்ற வீட்டில் ஜன்னல் கம்பியில் சிக்கிய திருடன் தர்ம அடி வாங்கும் வீடியோசமூக வலைதளத்தில் வைரலாகிறது. சூரத் நகரில் உள்ள வீட்டின் ஜன்னல் வழியாக நுழைந்து, திருட முயன்றுள்ளான். வசமாக சிக்கியதும் பொதுமக்கள் ஒன்று கூடி துடைப்பம், கற்களால் அடி வெளுத்தனர். திருடுவதற்கு முன்னரே மாட்டிக்கொண்டதால் வீட்டில் பொருள்கள் ஏதும் பறிபோகவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
