மதுரை: தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர், அமைச்சர், செயலாளரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? என்று மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருந்தால் துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து சென்றிருப்பார். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்துடன் லண்டனில் ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும். முதலீட்டை ஈர்க்கும் பயணமா? இன்பச் சுற்றுலா? சென்றாரா என மக்கள் கேட்கும் நிலை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
