பா.ரஞ்சித் இயக்கத்தில் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ நாளை (செப்.18) மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘வேர்ட் ஆஃப் வேட்டுவம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த வீடியோ குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கும் இத்திரைப்படம் கேங்ஸ்டர் மற்றும் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
