இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று (செப்.17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது எக்ஸ்-தள பக்கத்தில் அவருக்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். அஷ்வின் மகத்தான சாம்பியன்களில் ஒருவர் என்றும், அவரின் அறிவு, போராட்ட குணம் மற்றும் சாதனைகள் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அஷ்வினின் ஆட்டத்திறன் எதிர்கால தலைமுறையினரை என்றும் ஊக்குவிக்கும் என ரெய்னா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துகள் அஷ்வின்” – தமிழில் அசத்திய ரெய்னா
