“குற்றம் சுமத்துவது எனது நோக்கமல்ல. நான் தேமுதிக மீது குறை சொன்னதாக பிரேமலதா விஜயகாந்த் புரிந்துகொண்டார்” என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, “திமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலுக்கு தேமுதிக தான் காரணம்” என திருமாவளவன் கூறியதாக தெரிகிறது. இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், பதவி ஆசைக்காக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு, தற்போது தங்கள் மீது குற்றம்சாட்டுவதாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தனது கருத்துக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
