Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே பிளக்ஸ் போர்டு வைப்பதில் தகராறு…. ஒருவர் குத்திக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சத்தியமங்கலம் தெற்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் தளபதி (50). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார்..

அதே பகுதியில் 1)ராஜ்குமார் (30), 2)பிரகாஷ் (28), 3)மதியழகன் (58),
ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி உயிரிழந்த தளபதியின் மகன் சேதுபதி என்பவருக்கும் மதியழகன் மகன் 2)பிரகாஷ் என்பவருக்கும் கும்பாபிஷேகம் பிளக்ஸ் போர்டு வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து

1)ராஜ்குமார், 2)பிரகாஷ், 3)மதியழகன்..

ஆகியோர் தளபதி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு தளபதியை நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த தளபதியை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தளபதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.. பிரேதத்தை கைப்பற்றிய கபிஸ்தலம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

மேலும் தகராறில் ஏற்பட்ட காயத்தில் சம்பவத்தில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்..

  1. ராஜ்குமார்,
  2. மதியழகன்.

ஆகியோரை கபிஸ்தலம் காவல் நிலையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோயில் கும்பாபிஷேகத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!