Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1008 தீபங்கள் ஏற்றி மோடி பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை‌ முன்னிட்டு மகாமக குளக்கரையில் 1008 தீபங்கள் ஏற்றி பாஜகவினர் வழிபாடு.

​பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் கும்பகோணத்தில்

நடைபெற்றன.

​இதன் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பகோணம் மகாமக குளக்கரையில் 1008 தீபங்கள் ஏற்றி பிறந்த நாளை கொண்டாடினார்.

​இந்நிகழ்ச்சியை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பூண்டி வெங்கடேசன் முதன்மைச்

சுடரை ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

​இதில் திரளான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அகல்

விளக்குகளில் தீபமேற்றி, பிரதமரின் நீண்ட ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!