செங்கல்பட்டு அருகே நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்திருக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே பச்சையம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கிய நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் குப்பை மேடு முழுவதும் தீ பரவி இருந்ததால் அதை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தீ விபத்தின் காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு கரும் புகை வெளியேறியுள்ளது. இதனால் பச்சையம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அருகில் உள்ள சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றனர்.
செங்கல்பட்டு அருகே திடீர் கரும்புகை- பொதுமக்கள் அவதி
