Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ… 2 கோடி பொருட்கள் சாம்பல்

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ... 2 கோடி பொருட்கள் சாம்பல்

​கோவை, வடவள்ளி அருகே வீரகேரளம் பகுதியில் செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

கோவை, காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்குச் சொந்தமான ‘வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோன்’, வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் இயங்கி வருகிறது.
​இந்நிலையில், இன்று இக்குடோனில் திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பிளாஸ்டிக் கழிவுகள்

மற்றும் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ கண நேரத்தில் குடோன் முழுவதும் மளமளவெனப் பரவி அசுர வேகத்தில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வடவள்ளி காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
​தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கோவை மாநகரக் காவல் துறையின் பிரத்யேகத் தண்ணீர் பீரங்கி வாகனம் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் தொடர் போராட்டத்திற்குப் பிறகு தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பயங்கரத் தீ விபத்தால் சின்மயா நகர் மற்றும் வீரகேரளம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் அடர்ந்த கருப்புகைப் மூட்டமாகக் காட்சி அளித்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர்.
​இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

இச்சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!