மானிய சிலிண்டருக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்- மத்திய அரசு.
அக்டோபர் 1 முதல் மானிய விலையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பெற, ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்.
ஏற்கெனவே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு முடிந்த பிறகே மானிய விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பை எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகம் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் செயலிகள் மூலம் மேற்கொள்ளலாம்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்யாதவர்களுக்கும் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்; ஆனால் மானியம் இல்லாமல் சந்தை விலையில் வாங்க வேண்டும்.
தகுதியற்ற மற்றும் போலி இணைப்புகளைத் தவிர்த்து, மானியம் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதே நோக்கம்– மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.
உதவிக்கு எல்பிஜி சேவை உதவி எண்: 1800 2333 555.
