தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று சட்டமன்ற பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இத்திட்டம் மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.
பெண் கல்வி, பணி வாய்ப்பு மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் இச்சேவை விரிவுபடுத்தப்படுகிறது.
