வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் செங்கடல் மாகாணத்தில் உள்ள ஒனி நகரில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நேரிட்ட இந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், சுரங்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 11 தொழிலாளர்கள் பலி
