தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.
இங்கு குருவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
தற்போது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளான கபிஸ்தலம்,அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, மெலட்டூர்,பாபநாசம்,
சாலியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள்
தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது வயல்களில் நடவுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆங்காங்கே நாற்று நடவு பணிகளில் அப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நாற்றுகளை நட்டு வருகின்றனர். இவ்வாறு நடவு செய்யும்போது களைப்பு தெரியாமல் இருக்க தங்களுக்கென உள்ள நாட்டுப்புற பாடல்களை பாடியபடி வயல்களில் நடவு பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் கூடுதலாக நெல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன்
விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
