கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத தேரோட்டம் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 21 ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நிறுவனர்சியாக நடைபெற்றது அன்த தொடர்ச்சியாக
புரட்டாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள் துணைவியாருடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் தீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் மக்கள் வெள்ளத்தில் கோவிந்தா… கோவிந்தா… என பக்த முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்த பிறகு நிலையை வந்தடையும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு பணிக்காக போலீசார் முக்கிய பகுதிகளில் பேரிகாடுகள் அமைத்து ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதம் தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
