Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திராவில் ரயில் மோதி பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி

ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்ரீகாகுளம் மாவட்டம், டெக்கலி மண்டலத்திலுள்ள ரவிவலசா அருகே இன்று ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் நான்கு இடைநிலை மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்தார். விபத்து நடந்தபோது மாணவர்கள் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ராயவலசா அருகே நவ்படாவில் இருந்து டெக்கலியை நோக்கி ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்ட வாளத்தை கடக்க முயன்ற பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் மீது ரெயில் மோதியது.இந்த விபத்தில் விசாகராவ், சரத், திலீப், சிவா ஆகிய 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராஜா என்பவர் படுகாயமடைந்த நிலையில், டெக்கலி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!