Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சோழிங்கநல்லூரில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

சோழிங்கநல்லூரில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் விஜயன் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் குடிசை அமைத்துள்ளார். இந்த குடிசை வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை முழுவதும் எரிந்தது.

அப்போது தீயானது அருகில் இருந்த ராஜி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டின் மீதும் பரவி கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு குடிசை வீடும் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தின்போது குடிசை வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தீயணைப்புதுறை வாகனம் சம்பவம் இடத்திற்கு வர தாமதமானதால் அப்பகுதி இளைஞர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிதனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ராஜி என்பவரின் வீட்டின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தீயில் கருகி நாசமாகியது.

இந்த தீ விபத்தின் போது அருகில் இருந்த குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறியது. தீ விபத்து குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!