2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலரும், டெல்லி 2.67 பில்லியன் டாலரும், கர்நாடகா 2.11 பில்லியன் டாலரும், குஜராத் 1.30 பில்லியன் டாலரும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளன.
அந்நிய முதலீட்டில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு
