1990 முதல் மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில், கலப்பட மதுவை அருந்தியதால் மோகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும், துயன்சாங் மாவட்டத்தில் 11 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மதுவின் விநியோகச் சங்கிலியைக் கண்டறிய ஏஎஸ்பி ஐ. புங்லாங் சாங் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டு, 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆய்விற்காக மாதிரிகள் குவஹாத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நாகலந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி
