Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக நிர்வாகி மீது தாக்குதல்

தவெக கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தவெக கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், காரில் சென்ற முருகானந்தத்தை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று பேர் கொண்ட கும்பல், இரும்பு பைப்பால் கார் கண்ணாடியை அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. காயமடைந்த தவெக மாநகரச் செயலாளர் முருகானந்தம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

error: Content is protected !!