வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்க உயர்மட்டக் குழு அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, வங்கிகள் இன்று (செப்.28) வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
