ரூ.49 கோடியை செக் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா அளித்த புகாரின் பேரில், நடிகை அம்பிகாவை நேரில் அழைத்து விசாரிக்க சென்னை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இப்புகார் தொடர்பாக நேற்று (செப்.28) நடிகை ராதாவிடம் காவல்துறையினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், இந்நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, அளிக்கப்பட்டுள்ள புகார் FIR பதிவு செய்யும் அளவுக்கு உகந்ததா என்பது குறித்து காவல்துறையினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செக் மோசடி புகார்: நடிகை அம்பிகாவிடம் போலீசார் விசாரிக்க திட்டம்
