சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 உணவுப்படி வழங்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், அதனை ரூ.100 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு இத்தகைய உணவுப்படியை விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், விடுப்பில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் விடுபடாமல் இந்த உணவுப்படியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.100 உணவுப்படி வழங்க கோரிக்கை
