இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) நாடு முழுவதும் ‘தலைமைக் காவலர் (கல்வி மற்றும் மன அழுத்த ஆலோசனை நிபுணர்)’ பணிக்கான 16 இடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இதில் 14 ஆண்கள் மற்றும் 2 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உளவியலில் பட்டப்படிப்பு அல்லது B.Ed/BT உடன் கூடிய பட்டப்படிப்பு தகுதியாகும். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். செப்., 28 முதல் அக்., 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு recruitment.itbpolice.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.
ITBP தலைமை காவலர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு
