அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘தி ரெப்டைல் ஜூ’ விலங்கு காப்பகத்தில், சுமார் 250 பவுண்டு எடை கொண்ட ராட்சத முதலையை பெண் ஒருவர் தனது கை மற்றும் தோள்களில் குழந்தை போல சாதாரணமாக தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பவுண்டன் வேலி பகுதியைச் சேர்ந்த ஜெ ப்ரூவரின் மகள் ஜூலியட் ப்ரூவர், ‘டார்த்’ என்ற முதலையை சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்துள்ளார். பல வருடங்களாகப் பராமரித்து வருவதால், அந்த முதலைக்கும் ஜூலியட்டிற்கும் இடையே அசாத்தியமான நட்பு உருவாகியுள்ளது.
ராட்சத முதலையை குழந்தை போல் தூக்கிய பெண்
