அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வக்கரமாரி கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்தவர் ஆறுமுகம். வயது 70. இவரது மனைவி
பழனியம்மாள். வயது 60. இருவரும் தினக்கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்த குறை தெரியாமல் இருவரும் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வயது மூப்பின் காரணமாக ஆறுமுகம்

உயிரிழந்தார். இதனை கேட்ட அவரது மனைவி பழனியம்மாளும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

ஒரே நேரத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை

ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என்பதால், கிராம மக்களும் உறவினர்களும் இவர்களது இறுதிச் சடங்குகளை செய்து வருகின்றனர்.
