தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (அக்.2) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
