Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“தவெக மீண்டும் மகத்தான வெற்றி பெறும்”–திருச்சியில் அமைச்சர் ரமேஷ்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாளை (காந்தி ஜெயந்தி) முன்னிட்டு, திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பாக அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் மற்றும் மாநகராட்சி ஆணையர் என். பொன்மணி ஆகியோர் பங்கேற்று மலர் மாலைகளை அணிவித்து தேசப்பிதாவிற்கு தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
அப்போது, அரசு அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு காந்தியடிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

தீபாவளி கதர் சிறப்பு விற்பனை

இதையடுத்து தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், திருச்சி
ரெயில்வே சந்திப்பு நிலையம் எதிரில் உள்ள கதர் அங்காடி வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி கதர் அங்காடியில் 158-வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் மற்றும் மாநகராட்சி ஆணையர் என். பொன்மணி ஆகியோர் அண்ணல் காந்தியடிகள் திருவுருவப் படத்தை திறந்துவைத்தனர்
இவ்விழாவில் அரசு அலுவலர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வரும் 2026-2027-ஆம் ஆண்டிற்கு இம்மாவட்டத்திற்கு 200.00 இலட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள் பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கதர், பாலியஸ்டர், பட்டு இரகங்களுக்கு 30 சதவீதம் மற்றும் உல்லன் இரகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசுத்துறை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் முறையில் கதர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிறகு அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் எதிர்வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் (தவெக) தான் மீண்டும் மகத்தான வெற்றி வாய்ப்பைத் தேடித் தரும்.
எதிர்வரும் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமோ, நிலையோ தவெகவிற்கு இல்லை. திமுகவினர் பொதுவெளியில் நாகரிகமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா சொல்லிக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், முன்பு கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அந்தத் தொகுதி மக்கள் பாடம் புகட்டியது போல, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் திமுகவிற்குப் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

திருச்சி திருவரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து, போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்த புகாரில், திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் போலீஸாரால் பஞ்சப்பூர் பகுதியில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராம்குமார், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாடகம் ஆடியதாகவும், எனினும் மருத்துவர்கள் அவரை முழுமையாகப் பரிசோதித்து நலம் என்று சான்றளித்த பின்னர், காவல் துறையினர் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளார்நிலத்தை விலைக்கு வாங்கிய திமுக நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தை அவருக்கு முறைகேடாக விற்பனை செய்த புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியும் கைது செய்யப்படுவாரா?என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு
இந்த நில மோசடி வழக்கில் சட்டப்படி படிப்படியாக அனைத்து நடவடிக்கைகளும் தொடரும்.
இந்திய தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணியினர் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் தவெக பங்கேற்குமா? என்பது குறித்து தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் (ஜோசப் விஜய்) அவர்கள் முறைப்படி அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.

error: Content is protected !!