Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹைட்ரோகுளோரிக் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியில் திடீர் அமில கசிவு

ஹைட்ரோகுளோரிக் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியில் திடீர் அமில கசிவு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏற்றிச்சென்ற லாரியில் திடீரென கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது தீயணைப்பு வீரர்கள் சுண்ணாம்பு பவுடரை பரப்பி ஹைட்ரோகுளோரிக் ஆசிட் வீரியத்தை குறைத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 25ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் நிரப்பிக்கொண்டு லாரி ஓன்று திருச்சி மதுரை-தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது லாரியை திருநெல்வேலியை சேர்ந்த ஆதிமூலம் என்பவர் ஒட்டி சென்றிருந்தார்.

அமிலம் ஏற்றிச்சென்ற லாரி விராலிமலை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அருகே சென்றபோது லாரியில் இருந்து ஆசிட் கசிந்துள்ளது, இதை கண்ட லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை சாலை ஓரம் நிறுத்தி அமில கசிவை அடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது டேங்கர் லாரியில் இருந்து மற்றொரு பகுதியில் இருந்து ஆசிட் கசிய தொடங்கியது. வெளியேறிய அமிலம் புகை போல காணப்பட்டது. இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சம்பவம் குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு லாரி ஓட்டுநர் ஆதிமூலம் தகவல் அளித்துள்ளார்.

கடினமான பொருளை கூட அரிக்கும் தன்மைகொண்ட இந்த அமிலம் சுற்றுப்புறத்தில் பரவினால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு பார்வையே பறிபோகும் தன்மை கொண்ட இந்த அமிலம் தொழிற்சாலை ஆய்வகங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் பொருள்கள் என்று கூறப்படுகிறது

இதற்கிடையே நிகழ்விடம் வந்த இலுப்பூர் தீயணைப்பு அலுவலர் மகேந்திரன் தலைமயிலான தீயணைப்பு மற்றும் மிட்பு குழுவினர் முதல் கட்டமாக ஆசிட் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் அதிகம் இல்லாத விராலிமலை அடுத்துள்ள மாணிக்கம்காடு என்ற பகுதிக்கு ஓடிச்சென்று காட்டுப்பகுதில் நிறுத்தி லாரியில் இருந்து வெளியேறும் புகையை சுண்ணாம்பு பவுடரை நிரப்பி வைத்து ஆசிட்டின் வீரியத்தை குறைத்து வருகின்றன, லாரி தற்போது வரை விராலிமலையில்தான் நிறுத்தபட்டுள்ளது. கசியுடன் லாரி எடுக்கமுடியாததால் மற்றொரு லாரி சம்பவஇடத்திற்கு வரவழைக்கப்பட்டு அமிலம் அந்த லாரியில் மாற்றப்பட்டு லாரிப்புறப்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!