பிரதமர் நரேந்திர மோடி யின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை பாராட்டு விதத்தில் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி காட்சி மூலம் பொதுமக்களிடம் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி ஜங்ஷன் மத்திய தபால் நிலையம் அருகில், பி.எஸ்.என்.எல். அருகிலுள்ள மெயின் ரோட்டில் நடைபெறும் என்று திருச்சி மாநகர், மாவட்ட பாஜக சார்பில் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அந்த சாலையில் பெரிய பஸ்சில் பெரிய திரை மூலம் ஒளிபரப்பு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகர போலீசார் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தனர். பொது மக்கள் அதிகம் செல்லும் வாகன பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதெல்லாம்,விழா நடத்துவதற்கு முன்பே போலீசாரிடம் முறையாக அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் பாஜகவினர்
அனுமதி கடைசி நேரத்தில் கேட்ட காரணத்தால் மறுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று போலீசாரின் தடையை மீறி பாஜவினர் அங்கு விழா நடத்த ஏற்பாடு செய்தால் அவர்களை போலீசார் கைது செய்யும் வகையில் பி. எஸ்.என். எல் சாலையில் போலீசார் வேன் உடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போலீசாரின் தடையை மீறி பாஜகவினர் இங்கு வந்தால் அவர்களை கைது செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர். பிரதமர் மோடி விழாவிற்கு திருச்சி மாநகர் போலீசார் அனுமதி மறுத்தது பாஜக வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
