ஜெவார் விமான நிலையம் என்று பரவலாக அழைக்கப்படும் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு “நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விமான நிலையத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சூட்டுவதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.
