ஓடிசா மாநில ம. பல்லேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் சீதாராம் பிரதான் (36) இவரது நண்பர் சிம்பு பிரசாத் தாஸ் (வயது 33) இருவரும் திருச்சியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தனர். இருவரும் காஜா நகர் பகுதியில் தங்கி உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஒட்டலில் இருந்து தங்கி இருக்கும் அறைக்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்பட்டு புதுக்கோட்டை- திருச்சி சாலையில் வந்த பொழுது வண்டியை ஓட்டி வந்த சீதாராம்
பிரதான் திடீரென்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது எதிர்பாராதமாக மோதினார். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஒட்டிய சீதாராம் பிரதானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் சீட்டில் அமர்ந்திருந்த சிம்பு பிரசாத்தும் பலத்த காயத்துடன் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சீதாராம் பிரதான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டேன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
