தஞ்சையில் நவராத்திரி உற்சவம் விழாவை முன்னிட்டு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு மனோன்மணி அலங்காரத்தில் காட்சியளித்தார்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை, கணபதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வராஜ கணபதி , ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவ விழா இன்று தொடங்கியது.
இதையொட்டி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள்

நடைபெற்றன. தொடர்ந்து, முதல் நாள் “ஸ்ரீ மனோன்மணி ” அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி உற்சவ விழா வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் கோவில் வளாகத்தில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
