விழுப்புரம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் கடந்த 12ம் தேதி அதிகாலையில் காணாமல் போன 7 வயது சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. 15 நபர்கள், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தும் 5வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்கிறது. சிறுமி பிறந்தநாளின் போது அவருடன் இருந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 2 தனிப்படைகளை அமைத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் அருகே 5 நாட்களாக சிறுமியை தேடும் தனிப்படை போலீஸ்
