Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியின் ”ஜெயிலர் 2” .. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்திற்கு பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும், ரஜினியின் முந்தைய படமான ‘கூலி’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை ஜெயிலர் 2 படத்தால் முறியடிக்க முடியவில்லை.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், விஜய் சேதுபதி, மிதுன் சக்கரவர்த்தி போன்ற பல புதிய முகங்களும் இணைந்துள்ளனர். இப்படத்தில் ஹிர்திக் ரோஷன் சிறப்பு தோற்றத்தில் (Cameo) நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, உலக அளவில் இப்படம் முதல் நாளில் ரூ. 125.25 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்திய அளவில் ரூ. 70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 55 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ படம் முதல்நாளில் ரூ.151.14 கோடி வசூல் செய்தது . எனவே கூலி திரைப்படம்தான் ரஜினியின் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஓப்பனிங் வசூலாகும்.

இந்நிலையில் தொடர்ந்து வார இறுதியில் நாட்களில் படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதால் வசூல் ரூ. 200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனையை எட்டுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

error: Content is protected !!