மாமல்லபுரத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்துக்கான புதிய வளாகம் அமைப்பதற்காக முந்தைய ஆட்சி காலத்தில் கோரப்பட்டிருந்த டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாகவே இதற்கான நிதி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, L1 நிறுவனமும் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்துத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
மாமல்லபுரம் நகர்ப்புற பயிற்சி நிறுவன டெண்டர் ரத்து
