Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 தமிழகத்தில் கனமழை: ரயில் தடம்புரண்டு விபத்து…!!

 தமிழகத்தில் கனமழை: ரயில் தடம்புரண்டு விபத்து...!!

நிலச்சரிவு காரணமாகப் பிலாஸ்பூர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக நாகர்கோவில் -திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் இடையே இயக்கப்படும் 6 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதியான பாறசாலை (Parassala) அருகே ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.கனமழை காரணமாக தண்டவாளத்தின் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மண் சரிந்ததால், ரயிலின் இன்ஜின் பகுதியிலிருந்து 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டது.

•இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

மீட்புப் பணிகள்: ரயில்வே நிர்வாகம் உடனடியாக மீட்பு ரயிலை (ART) அனுப்பி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன், பயணிகள் பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்..

error: Content is protected !!