அரியலூரில் நடைபெற்ற ‘விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி’: படுகாயமடைந்த நபர்களை மீட்கும் பணிகளை, தத்ரூபமாக கண்முன் நிகழ்த்தி காட்டிய மீட்புக்குழுவினர்.
World Trauma Day முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட அளவில் விபத்தால் பெரும் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்

சம்பவத்தில், உடனடியாக எப்படி மீட்பு பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை இந்த ஒத்திகை நிகழ்ச்சி மூலம் தத்துரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மருத்துவ மாணவர்கள் பயணம் செய்த பேருந்தும், காரும் மோதி

விபத்துக்குள்ளானது போன்று காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவக் குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் என அரசின் பல் துறையினரும் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்சிகள் காண்போரை பரபரப்புக்குள்ளாகியது.
விபத்து ஏற்பட்ட பேருந்தில் இருந்த மாணவர்கள் காயம் பட்டிருப்பது போன்றும், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் காட்சிகளும் கண் முன்னே நிகழ்த்தி காட்டப்பட்டது.
மேலும் விபத்து சிக்கிய கார் ஒன்றில் இருந்து ஓட்டுநர் நீக்கப்படுவதும் சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு cpr சிகிச்சை அளித்தும் பயனின்றி அவர் உயிரிழக்க நேரிடும் காட்சிகளும் தத்ரூபமாக நிகழ்ச்சி காட்டப்பட்டது.
ஒரு விபத்து ஏற்பட்ட உடனேயே என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக இந்த விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியானது அரியலூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி சம்பவ இடத்திற்கு வருகை தந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் காட்சிகளும் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.
