திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏற முயன்ற

நபரை அரசு பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செருப்பு காலால் முகத்தில் எட்டி உதைக்கும் அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட டவுன் பேருந்துகளும் 100க்கும் மேற்பட்ட மப்சல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
நாள் ஒன்றிற்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பேருந்து நிலையத்தை

பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காங்கேயத்தில் இருந்து சென்னிமலை செல்லும், 1B என்ற அரசு டவுன் பேருந்தில் குடிபோதையில் நபர் ஒருவர் ஏற முயன்றதாக கூறப்படுகிறது.
இதை கண்ட அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்து பயணியை கீழே தள்ளி செருப்பு காலால் அவரது முகத்தில் எட்டி உதைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனவர்களுக்கு பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள பலமுறை போக்குவரத்து கழகங்கள் அறிவுரை வழங்கியுள்ள நிலையிலும்,
காங்கேயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மனிதாபிமானம் இல்லாத செயலால் பொதுமக்கள் மற்றும் சக பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடிபோதையில் பேருந்து ஏற முயன்ற நபரை ஏற்றாமல் சென்றிருக்கலாம், அல்லது ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தி இருக்கலாம்,
அதை தவிர்த்து நூற்றுக்கணக்கான பயணிகள் மத்தியில் செருப்பு காலால் அரசு பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முகத்திலேயே எட்டி உதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
