கோவை மாநகராட்சி 62-வது வார்டுக்கு உட்பட்ட சஃபா கார்டன் பேஸ் 3 பகுதியில், வீடுகளின் வாசல் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழைநீர் தேங்கியுள்ளதால் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள்

தெரிவிக்கின்றனர்.
வீட்டை விட்டு வெளியே செல்வதற்குக்கூட சிரமமான சூழல் நிலவி வருவதால், அன்றாடப் பணிகளுக்குச் செல்வோர் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கவும், குழந்தைகள் மற்றும் பெண்களின்

பாதுகாப்பை உறுதி செய்யவும், சஃபா கார்டன் பேஸ் 3 பகுதியில் முறையான தார் சாலை அமைத்துத் தர மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
